பறவையில் ஒரு வகை
கனவிலே வெகு நேரமாய், காற்றிலே ஏன் பறக்கிறாய் ? தென்படும் வேளையில், தென்றலாய் ஏன் மாறினாய் ? என கேட்க்கையில், பின்தொடர்க்கையில், பூஞ்சோலையில் சென்று ஒளிகிறாய் ஒளிர்வதும், பின் ஒளிவதும் இவள் விண்மீன், விடை கூறினாய்! நாம் போகிற வழியிலே நீ பூக்களை கொய்கிறாய் கொய்கிற பூக்களை நம் சாலையில் விரிக்கிறாய் நாணத்தில் நிற்கிறாய், பூஞ்சோலையில் ஒரு மலர் பூவென உன்னை பறிக்கையில் முட்களாய் ஏன் குத்தினாய் ? பார்த்ததும் ஏன் தொடரனும், என இலக்கணம் கேட்கிறாய் கேட்டதும் சொல்ல முடியுமா, என் தயக்கத்தை உணர்கிறாய் கேள்வியின் விடை சொல்லவா இல்லை கேட்காத கதை பல சொல்லவா இது காட்ச்சியை மறந்த கண்கள், அதில் மயக்கத்தை பார்க்கிறாய்! மெய்யிலே ஒரு உயிரென உன்னை தொடரவே நான் முயல்கிறேன் இதை உணர்த்தவே தமிழ் இலக்கணம், என்னை புலவனாய் ஏன் மாற்றினாய்? கேள்விகள் பல கேட்கிறாய் என சொல்லியே மீண்டும் பறக்கிறாய் கேள்வியில் இது பாதி தான் என சொல்லும் முன்னே மறைகிறாய் காற்றிலே வெகு வேகமாய் செல்லும் பறவையில் இவள் ஒரு வகை தடம் மாறுமோ வின்னில் பார்க்கிறேன், ஏமாற்றமே என எண்ணினேன் தூரத்தில் வந்து நிற்கிறாய், என் ஏமாற்றத்தை...